tamilnadu

img

ஜம்மு - காஷ்மீரின் நிலைமை படுமோசம்.. இராக், சிரியா போன்ற நாடுகளோடுகூட ஒப்பிட முடியாது

காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகளை பறித்துக்கொண்ட மத்தியஅரசு, மக்கள் போராட்டக்களத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மூலம் மாநிலத்தையே திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றியது. தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இவை எல்லாவற்றையும்விட தொலைத்தொடர்பு வசதிகள் முற்றிலுமாக துண்டிக்கப் பட்டன. ஊடகங்கள் செயல்பட முடியவில்லை. 

ஆனால், தற்போது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாகவும், 370 நீக்கத்தைகாஷ்மீர் மக்கள் வரவேற்றுக் கொண்டாடுகிறார் கள் என்றும் மோடி அரசு தனது அதிகாரத்தின் மூலமாக பொய்ப்பிரச்சாரம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்நிலையில், காஷ்மீரின் உண்மையான நிலை, குறிப்பாக ஊடகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து, இதழியலாளர் தானிஷ்பின் நபி விவரித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:காஷ்மீர் பள்ளத்தாக்கில் தகவல் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருப்பதால், மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உள்ளூர்ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களுமேயாகும். இந்தக்கணத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீருக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்திய ஊடகவியலாளர்களுக்கும் அயல்நாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இடையேதான் கடும்போட்டி நடந்து கொண்டிருக்கிறது. காஷ்மீருக்குள் இறக்குமதி செய்யப்பட் டுள்ள இந்திய ஊடகவியலாளர்கள், 370-ஆவதுபிரிவின்கீழ் அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசாங்கம் ரத்து செய்ததற்காக, காஷ்மீர் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கூறிக்கொண்டிருக்கிற அதே சமயத்தில், அயல்நாட்டு ஊடகங்கள், ஊரடங்கு உத்தரவு, மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் அவர்கள்மீது ஏவப்படும் தாக்குதல்கள் போன்று இங்குள்ள யதார்த்தநிலைகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.தலைநகரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டஊடகவியலாளர்களுக்கும், அயல்நாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இடையேயான சண்டையில்உள்ளூர் ஊடகவியலாளர்களின் குரல்கள் வெளிவராமல் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்திய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால் நேரடியாகப் பாதிக்கப் பட்டிருப்பவர்கள் உள்ளூர்ஊடகங்களும் அவற்றில் பணிபுரியும் ஊடகவியலாளர்களும்தான்.

“அடக்குமுறை ஏவப்பட்ட ஆகஸ்ட் 5-இலிருந்தே நாங்கள் எந்தச் செய்தியையும் பிரசுரிக்க வில்லை. எங்களால் எங்கள் ஊழியர்களுடன் தொடர்பு கொள்ளவே முடியவில்லை,” என்றுகாஷ்மீர் லைஃப் (Kashmir Life) ஏட்டின் உதவி ஆசிரியர் ஷாம்ஷ் இர்பான் கூறுகிறார். “ஊழியர்களில் பெரும்பாலோர் காஷ்மீரின் வடக்கிலும், தெற்கிலும் வாழ்கிறார்கள். அவர்களுடன் எங்களால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை,” என்றும் அவர் தெரிவிக்கிறார்.உழைக்கும் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை, தற்போதைய நிலைமையை 2016-இல் புர்ஹான் வானி கொல்லப்பட்ட சமயத்தில் மாநிலத்திலிருந்த பதற்ற நிலைமையுடன் ஒப்பிடுகிறார்கள். “நாங்கள் 2016 பதற்ற சூழலிலும்கூட வழக்கமான எங்களின் பணியினை செய்ய முடிந்தது. ஆனால் இப்போது அவ்வாறு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இணையத் தொடர்பு முற்றிலுமாக வெட்டப்பட்டிருக்கிறது. எனவே, இணையத்தின் மூலம் ஒளிபரப் பப்படும் அனைத்து செய்திகளும் அறவே இல்லாமல் போய்விட்டன. எப்படியாவது நாங்கள் செய்திகளைப் பெற்றுவிட்டாலும்கூட அதனை எங்களால் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. எனவே இணையவழி செய்தி ஒளிபரப்புவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம்,” என்கிறார், உள்ளூர் செய்தி ஏட்டின் ஆசிரியர் ஒருவர்.நான் பேட்டி கண்ட பல இதழியலாளர்கள்தங்கள் அடையாளத்தைக் கூற விரும்பவில்லை. ஏனெனில், ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
மற்றொரு உள்ளூர் இதழ், ‘காஷ்மீர் வாலா’ என்னும் வார இதழ். இவ்விதழ் கடைசியாக வெளிவந்தது ஆகஸ்ட் 4 அன்றுதான். அதன்பின்னர் அது வெளிவரவில்லை. “கடந்த 14 நாட்களாக எங்கள் இணையப் பக்கம் செயல்படவில்லை. எங்கள் ஊழியர்களுடன் எங்களால் தொடர்புகொள்ளவே முடியவில்லை. எங்கள் அச்சகத்திலும் மூலப்பொருள்கள் பற்றாக்குறையால் அச்சடிக்க முடியவில்லை,” என்று அந்த இதழின் ஆசிரியர் பஹத் ஷா கூறுகிறார்.“ஏதேனும் செய்தியை எந்த நிருபராவது கொண்டுவந்தாரானால் அது முழுமையாகவும் இல்லை. ஏனெனில் அவரது இயக்கம் என்பது ஸ்ரீநகருக்குள்ளேயே சுருங்கிவிடுகிறது. அவரால் ஸ்ரீநகரை விட்டு வெளியில் செல்ல முடியவில்லை,” என்று ஷா கூறுகிறார்.

ஊடக மையம்
ஆட்சியாளர்கள், ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊடக மையம் (‘Media’ Centre) ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். உள்ளூர்இதழியலாளர்கள் அங்கே செல்வதற்குத் தயங்குகிறார்கள். ஏனெனில் அங்கே மொத்தம் ஐந்துடெஸ்க்டாப்புகள் இருக்கின்றன. ஆனால் நகரத்தில் மட்டும் 200 இதழியலாளர்கள் இருக்கிறோம். தற்சமயம், புதுதில்லியிலிருந்தும் ஏராளமான இதழியலாளர்கள் வந்திருக்கிறார்கள். எனவே உள்ளூர் இதழியலாளர்களுக்கு டெஸ்க்டாப் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.ஊடகங்களுக்காவது இணைய தொடர்பைஏற்படுத்திக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்று செய்தியாளர்கள் கோருகிறார்கள். ஏனெனில் அப்போதுதான் செய்தி எது, வதந்திஎது என்பதை சரிபார்த்துக் கொள்ள முடியும் என்றுபஹத் ஷா கூறுகிறார்.

தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்துள்ள21ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் மக்களுக்கு அது முழுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது. “இதுபோன்றதொரு நிலைமை முன்னெப்போதும் இருந்ததில்லை. சிரியா அல்லது ஈராக் ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல் நடைபெற்ற காலங்களில்கூட இதுபோன்றதொரு மோசமானநிலை இருந்ததில்லை,” என்று அவர்கள் கூறுகிறார்கள்.“சிரியாவில் அலெப்போ மற்றும் ஹாம்ஸ் நகரங்களில் சண்டை நடந்தபோதுகூட, அங்கிருந்த செய்திகள் உலகம் முழுவதும் சென்று கொண்டிருந்தன. அதேபோன்று, ஈராக்கில் மொசூலில் சண்டை நடந்தபோதும்கூட ட்விட்டரில் அங்குள்ள நிலைமைகளைக் காண முடிந்தது. அவ்வாறு கடுமையாக மோதல்கள் நடைபெற்றபோதிலும்கூட இணையத் தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை. ஆனால் காஷ்மீரில்தகவல் தொடர்புக்கு மிகவும் மோசமான முறையில் வாய்ப்பூட்டு  போடப்பட்டிருக்கிறது. இதுபோன்றதொரு நிலைமை கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்டது இல்லை,” என்று ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த ஓர் உள்ளூர் இதழியலாளர் கூறுகிறார்.

இவர் மேலும், “தகவல் தொடர்பு சாதனங்களுக்குப் பல வழிகளில் வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கின்றன. முதலில், மொபைல் சேவைகள் வெட்டு. இரண்டாவதாக, இணையம் துண்டிக்கப்பட்டது. மூன்றாவதாக, தரைவழி தொலைபேசிகள் இறந்துவிட்டன. நான்காவதாக, நபருக்கு நபர் தகவல் பரிமாறிக்கொள்வதுகூட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதன் காரணமாக முடக்கப்பட்டுவிட்டது,” என்று கூறுகிறார்.“காஷ்மீரில் இப்போது ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் தங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்களின் நலம் குறித்தும் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் விசாரித்துக் கொள்ளும் பழைய முறைக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஏனெனில் வேறு வழியில்லை.  ஒரு இரண்டுநாட்களுக்குத் தன் உற்றார் உறவினர்களைப் பார்க்கமுடியவில்லை என்றால் அவருக்கு என்ன நேர்ந்துவிட்டதோ என்கிற அச்ச உணர்வு ஒவ்வொருவரிடமும் காணப்படுகிறது,” என்று வடக்கு காஷ்மீரில் ரபியாபாத் பகுதியில் வாழ் கிற ஒரு மாணவர் கூறுகிறார்.”

 கட்டுரையாளர், காஷ்மீர் இதழியலாளர்

;